சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், மலேசியாவில் இருந்து வந்த தம்பதியினருடன் பேசாமல் தப்பிக்க நினைத்து ரோகிணி பல்லு வலி என கிளம்பிச் செல்கின்றார். அவருடன் ஸ்ருதியும் துணைக்குச் செல்லுகின்றார்.
ரோகிணி ஹாஸ்பிட்டலுக்கு சென்றதும் தனக்கு இப்போது வலி குறைந்து விட்டது. அதனால் பிறகு மனோஜூடன் வருகிறேன் என்று நழுவ பார்க்கின்றார். ஆனாலும் ஸ்ருதி அவரை விடாமல் டாக்டரிடம் காட்டி சொத்தை பல்லை புடுங்கி விடுகின்றார்.
இன்னொரு பக்கம் முத்து, மலேசியாவில் இருந்து அவர்கள் வந்தவுடன் தான் ரோகிணிக்கு திடீரென பல்லு வலி வந்தது. இதில் ஏதோ மர்மம் இருக்குது என்று சொல்ல, மீனாவும் ஆமாம் அதற்கு முன்பு தேங்காயை தனது பல்லால் கடித்து சாப்பிட்டார். ஆனால் எப்படி திடீரென அவருக்கு பல்வலி வந்தது என தெரியவில்லை என்று சொல்லுகின்றார்.
அதன் பின்பு மலேசியாவில் இருந்து வந்தவர்கள் மீனாவின் சாப்பாட்டை பாராட்டி விட்டு செல்ல முற்றுப்படுகையில், மனோஜ் வருகின்றார். இதன் போது மனோஜை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார் விஜயா. அவர்கள் போன பிறகு ரோகிணி வருகின்றார். இதன்போது ஸ்ருதி எல்லாருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கின்றார்.
மறுபக்கம் ரவி ரெஸ்டாரண்டில் மீட்டிங் நடந்து கொண்டு இருக்க ஸ்ருதி போன் பண்ணுகின்றார். ஆனாலும் அவர் ஸ்ருதியின் போனை ஆன்சர் பண்ண முடியாமல் சைலண்டில் போடுகின்றார். ஆனாலும் ஸ்ருதி திரும்பத் திரும்ப கால் பண்ணி கொண்டு இருக்கின்றார்.
இறுதியில் முத்துவின் நண்பர் ஒருவர் துபாய் செல்ல இருப்பதாக கூறியதோடு அதற்காக பார்ட்டி வைக்க எல்லோரையும் அழைக்கின்றார். இதனால் முத்து மீனாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லைட்டா குடிக்கவா என்று கேட்கின்றார். ஆனாலும் மீனா அப்படி எல்லாம் வேண்டாம் என்று மறுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!