• Dec 25 2024

மாயாவின் தோல்வியை கொண்டாடிய பிரபலம்... சொன்னதை செய்து காட்டிய விஷ்ணு... தொடரும் பிக் பாஸ் வன்மம்

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7 பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு  விதம்  விதமான, போட்டிகள், திருப்பங்கள், மோதல்கள், காதல்,நட்பு  என கடந்து ஒரு நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்தது . 

இம்முறை பிக் பாஸ் டைட்டில் வின்னராக விஜே.அர்ச்சனா மக்கள் வாக்கினால் வெற்றியை தன் வசமாக்கினார். இதை தொடர்ந்து அர்ச்சனாவின் வெற்றி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அவர் PR டீம் மூலமே அதிகளவான வாக்குகளை பெற்றதாகவும், மக்களின் உண்மையான வாக்கினால் அவர் வெற்றி பெறவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் புகைந்தது .

பிக் பாஸ் முடிந்ததும் எல்லாமே முடிந்தது என்று தான் நினைத்தோம் ஆனால் இன்னும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த மாயா மற்றும் விஷ்ணுக்கு ஏற்ப்பட்ட வன்மம் மற்றும் ஓயவில்லை . 


பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே இருக்கும் போதே மாயா டைட்டில் வின்னர் ஆகவே கூடாது என்று நினைத்தவர் விஷ்ணு . மாயாவுக்கு டைட்டில் கிடைக்கா விட்டால் உண்மையாவே நான் ஆயிரம் வெடி வேண்டி கொளுத்துவேன் . என்று பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போதே கூறின விஷ்ணு அந்த வாக்கை வெளியில் வந்ததும் ஆயிரம் வெடி கொளுத்தி சொன்ன வாக்கை காப்பாற்றியுள்ளார் .

Advertisement

Advertisement