• Dec 26 2024

லாஸ்லியாவை மிஞ்சிருவாங்க போல தெரியுதே.. கிளாமரில் கலக்கும் இலங்கை தமிழ்ப்பெண் பிக்பாஸ் மதுமிதா..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இலங்கை தமிழ் பெண் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களாக எல்லை மீறிய கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதாவும் லாஸ்லியாவுக்கு  போட்டியாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. 

இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா தற்போது ஜெர்மனியில் இருக்கும் நிலையில் அவர் பேஷன் டிசைனர் மற்றும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதால் தற்போது அவர் தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். 

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள மதுமிதா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன்  கிளாமர் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்த நிலையில் ஏராளமான லைக்ஸ் கிடைத்து வருகின்றன. இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு பிறகாவது தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement