• Dec 26 2024

காதல் தோல்வியால் போதைக்கு அடிமையாகிய பிக்பாஸ் ஓவியா.. அதிர்ச்சி புகைப்படம்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை ஓவியா மது அருந்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’களவாணி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் ஓவியா நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்பதும் ரசிகர்கள் அவரது பெயரில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவர் பிரபலமானார் என்பது தெரிந்தது.

இருப்பினும் பிக் பாஸ் பிரபலம் அவரது திரையுலக வாழ்விற்கு எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஓவியா, சரக்கு அடித்துக் கொண்டே அசைவம் சாப்பிடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்திற்கு அவர் ’குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார்.
 
இதனை அடுத்து இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ஒரு நெட்டிசன் இந்த புகைப்படத்தை பார்த்து ’உடனே யூடியூப் சேனல்கள் காதல் தோல்வியால் போதைக்கு அடிமையான பிக் பாஸ் ஓவியா’ என்ற தலைப்பு போட்டு வீடியோ போடுவார்கள்’ என்று கமெண்ட் பதிவு செய்திருப்பது தான் காமெடியின் உச்சமாக உள்ளது. இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement