• Dec 26 2024

பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்த கங்குவா.. ஓட்டுமொத்த விமர்சனத்திற்கும் செருப்படி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதன் காரணத்தினால் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டா  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் கங்குவா படத்திற்கு எதற்காக நெகட்டிவ் கமெண்ட் வருகின்றது என தெரியவில்லை. முதல் அரை மணி நேரம்  ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனாலும் அதற்குப் பிறகு இடம்பெற்ற காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. சூர்யாவை நினைத்து பெருமைப்படுகின்றேன். பெண்களுக்கான சண்டை காட்சிகளை பாராட்டுவதற்கும் யாருக்கும் மனதில்லை. குறை சொல்பவர்கள் யாரும் சினிமாவை தூக்கி நிறுத்தப் போவதில்லை என கங்குவா டீம்க்கு தைரியம் கூறியிருந்தார்.

d_i_a

சுமார் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பிறகு கங்குவா  திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்காக தனது பாடியை செதுக்கியிருந்தார் சூர்யா. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2000 கோடியையும் வசூலிக்கும் என இதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், கங்குவா திரைப்படம் வெளியாகி மூன்றாவது நாளை கடந்துள்ள நிலையில், வசூல் விபரம் குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கங்குவா வெளியாகி முதலாவது நாளிலேயே 58 கோடிகளை வசூலித்து இருந்தது. 2வது நாளின் முடிவில் 89 கோடிகளை வசூலித்து இருந்தது . தற்போது மூன்றாவது நாளின் முடிவில் 127.64 கோடிகளை கங்குவா படம் வசூலித்துள்ளது.

கங்குவா படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையிலும், தற்போது விடுமுறை நாட்கள் என்பதாலும் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement