• Dec 25 2024

சூர்யா பிச்சைக்காரிய கல்யாணம் பண்ணிட்டாரு... படுகேவலமாக திட்டிய சுசித்ராவின் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் கங்குவா. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு  சூர்யா நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு அமோக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனாலும் இந்த படம் வெளியான முதல் நாள் முதல் ஷோவிலையே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிய ஆரம்பித்தன.

ஒரு சிலர் கங்குவா படம் மூன்று பாகுபலி படத்தை போல் உள்ளது, அவதார் படத்தை போல் உள்ளது. சூர்யா வெறித்தனமாக நடித்துள்ளார் என்று பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்தாலும் இன்னும் ஒரு சிலர் சிறுத்தை சிவா ஏமாற்றிவிட்டார். எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றுமே இல்லை என நெகட்டிவ் கமெண்ட்ஸ் அளித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து கங்குவா திரைப்படம் பற்றி பல மீம்ஸ், ட்ரோல் போன்றவை வைரல் ஆகின. இணையத்தில் கங்குவா படத்தை போட்டு வறுத்தெடுத்து இருந்தார்கள். இதன் காரணத்தினால் சூர்யாவின் மனைவி ஜோதிகா நேற்றைய தினம் கங்குவா  திரைப்படம் பற்றியும் சூர்யா பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

d_i_a

இந்த நிலையில், பிரபல பாடகி சுசித்ரா நடிகை ஜோதிகா முன்வைத்த கருத்தை தொடர்ந்து அவருக்காகவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுசித்ரா பேசிய விடயங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.


அதாவது, கங்குவா படத்தின் முதல் அரை மணி நேரம் ஒர்க் அவுட் ஆகலை என ஜோதிகா கூறியிருப்பார். அப்படி என்றால் நாங்கள் அரை மணி நேரம் கழித்து தான் தியேட்டருக்கு வர வேண்டுமா என்று சுசித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜோதிகா படத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவது போலவே குறிப்பிட்டுள்ளார். இதனால் சூர்யாவுக்கு வேற பெண் கிடைக்கவில்லையா? இந்த பிச்சைக்காரியை தான் திருமணம் செய்து கொண்டு உள்ளார். அதுதான் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்குது என ஜோதிகாவை விளாசித் தள்ளியிருந்தார். 

மேலும் படிப்பறிவு இல்லாத கழுத.. இங்கிலீஷ் எழுத தெரியாட்டி யார்கிட்டயும் சொல்லி எழுதி இருக்கணும் என்று தாறுமாறாக ஜோதிகாவை கிழித்துள்ளார். தற்போது சுசித்ராவின் வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement