• Dec 25 2024

BREAKING NEWS.! பிரபல நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

கலகலப்பு திரைப்படத்தின் நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மறைவு செய்தியை கேட்ட அனைவரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  


நடிகர் கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்த இவர் சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.


இந்நிலையில் சென்னையில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவால்  மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement