உத்திரப்பிரதேச மாநில மகா கும்பமேள திருவிழாவில் வசீகரத் தோற்றத்துடன் ருத்ராட்ச மாலைகளை விற்று வந்த மோனாலிசா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்காக காணப்படுகின்றார். இவரை பலரும் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டுள்ளனர்.
உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேள திருவிழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழா ஜனவரி 12-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
d_i_a
குறித்த திருவிழாவில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் பாசி மாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றை தனது குடும்பத்துடன் விற்று வந்துள்ளார். அகோரிகள், பாபாக்களுக்கு நடுவே மோனலிசா பாசி மாலையில் விற்றதை யூட்யூபர் ஒருவர் வீடியோவாக எடுத்து ரிலீஸ் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மோனாலிசாவின் வசீகர தோற்றத்தையும் காந்த கண்ணழகையும் பார்த்த யூட்யூபர்கள், போட்டோ கிராபர்கள் மோனாலிசாவை நோக்கி விரைந்து பேட்டி எடுத்தும் வீடியோ பதிவு செய்தும் அவரை ட்ரெண்டிங் ஆகியுள்ளனர். ஆனாலும் இதைப் பார்த்து பயந்த மோனாலிசாவின் பெற்றோர் அவரை ஊருக்கே அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மோனலிசா போஸ்லேவிற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது வசீகரத் தோற்றத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் அவரை நடிக்க வைக்க ஆசைப்படுவதாகவும் அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.
குறித்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால், ராம் கி ஜன்மபூமி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!