விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது இந்த சீரியலில் ரோகிணியின் கபட நாடகங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன் கதைக்களம் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
d_i_a
அதில் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் கடையை அங்கு வந்த டிராபிக் அதிகாரி பொது இடத்தில் கடை வைக்கக் கூடாது என்று கடையை மொத்தமாக வண்டியில் ஏற்றுகின்றார். அது மட்டும் இன்றி அங்கிருந்த பாட்டியையும் தள்ளி விடுகிறார். இதனால் அங்கிருந்த முத்துவின் மீனாவும் அவர்களை தூக்கி விடுகின்றார்கள்.
மேலும் பாட்டியை தள்ளிவிட்டதால் கோபப்பட்ட முத்து, நீ எல்லாம் ஒரு டிராபிக் அதிகாரியா? என்று அவருடன் வம்புக்கு செல்கின்றார். அதன்பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்துவிடம் நீ என்ன பெரிய ரவுடியா? என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்கிறார்.
இதன் போது வயதான தாத்தாவும் பாட்டியும் கெஞ்சிக் கொண்டிருக்கும்போது அவர்களை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் டிராபிக் அதிகாரி தள்ளிவிட்டதாக சொல்லுகின்றார். இதனால் கோபப்பட்ட இன்ஸ்பெக்டர், அவங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா உன்ட சட்ட கிழிஞ்சிடும் என்று டிராபிக் அதிகாரியை கண்டிக்கின்றார்.
இறுதியாக வெளியே வந்த முத்துவிடம், இந்த முறை தப்பிச்சுட்ட.. அடுத்த முறை உன்னை யாரு காப்பாற்றது என்று பார்ப்போம் என குறித்த டிராபிக் அதிகாரி முத்துவுக்கு சவால் விடுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
இதேவேளை, தாத்தா பாட்டியின் கடைகளை மொத்தமாக போலீசார் அள்ளிச்சென்ற நிலையில் அதில் ஏற்கனவே வித்யா தவறவிட்ட முத்துவின் போனும் உள்ளடங்கும்.
இதனால் முத்துவின் போன் மீண்டும் அவரது கைக்கு கிடைக்குமா? அதனை வித்யா தான் தவற விட்டுச் சென்றார் என்ற உண்மையையும் முத்து கண்டு பிடித்து ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!