• Feb 01 2025

பிரசவத்துக்காக காயத்ரி பட்ட துன்பங்களை பார்க்க முடியல! கார்த்திக் வெளியிட்ட வீடியோ

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்தவர் தான் அஸ்வின் கார்த்திக். இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமா வாய்ப்பை தேட ஆரம்பித்தார் அஸ்வின் கார்த்திக். ஆனால் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழி என்று சின்னத்திரையில் கவனம் செலுத்தினார்.

d_i_a

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார். அதன் பின்பு அரண்மனை கிளி, மனசு போன்ற சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தார். இவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சீரியல் தான் வானத்தைப்போல சீரியல்.


வானத்தைப்போல சீரியலில் இவருடைய கேரக்டர் ஆரம்பத்தில் நெகட்டிவ் ஆக காட்டப்பட்டது. ஆனால் அதன் பின்பு இவருடைய கேரக்டர் பாசிட்டிவாக மாறியது. இதனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. அதன் பின்பு காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில், அஸ்வின் கார்த்திக் - காயத்ரி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் அதற்கு முன்பு அவர் காயத்ரியை ஹாஸ்பிடலில் அனுமதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவையும் குழந்தை பிறந்த பிறகு தனது கையில் ஏந்திய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய மனைவி பட்ட கஷ்டங்களை பார்த்து ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement