• Feb 01 2025

சாக்‌ஷி அகர்வாலுக்கு இப்படித் தான் காதல் திருமணம் நடைபெற்றதா? அவரே சொன்ன உண்மை

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கு பற்றியவரே சாக்‌ஷி அகர்வால்.  இவர் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் துணை நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த ராஜா ராணி , காலா மற்றும் அரண்மனை 3 போன்ற படங்களில் தனது திறமையை காட்டியுள்ளார்.

தற்பொழுது நேர்காணல் ஒன்றில் தனது காதல் திருமணம் பற்றி கதைத்த வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் அவர் தனது கணவன் பற்றி கூறியுள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், நான் அவரை சந்திக்கும் போது அவர் தனது நண்பியுடன் கதைத்துக்  கொண்டு இருந்ததாகவும் தான் அவரது நண்பருடன் கதைத்ததாகவும் கூறினார். அதன் பின்னர் எனக்கு அவரை பிடித்திருந்தது.  அத்துடன் அவர் என்னுடைய close பிரண்ட் என்றும் கூறினார்.

அதன்பின் எனது வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவருடன் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தோணுச்சு. எனக்கு வாழ்க்கையில நடந்த எல்லா துன்பத்திலும் எனக்கு ஒரு தூண் மாதிரி அவர் தான் இருந்தவர் என்றார் சாக்‌ஷி.

மேலும் என்னை காதலிக்க முன்பு என்னுடைய அப்பா, அம்மாவ தான் கரெக்ட் பண்ணாரு..  பிறகு தான் எனக்கு காதலை சொன்னார் என்றார்.  அத்துடன் 10 வருடம் நாங்கள் பிரிந்து இருந்தோம் இப்பொழுது தான் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement