தமிழ் சினிமா மற்றும் நகைச்சுவை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் சிரிக்கோ உதயா. இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் நிலை குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். குறிப்பாக, சக்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள், அவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்றார்.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த ஓட்டம் குறைவது மிகவும் அபாயகரமான ஒன்று. உதயாவும் இதே நிலையை தான் எதிர்கொண்டார். "முதலில் 3 விரல்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை. சிறு பிரச்னையாக இருந்தது. ஆனால், பின்னர் நிலை மோசமாவதை மருத்துவர்கள் கவனித்தனர். அதனால், அவற்றை நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது," என உதயா பகிர்ந்தார்.
உதயாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கவனம் செலுத்திய பிறகு, அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் கூறப்பட்டது."மூன்று விரல்களை மட்டும் வெட்டியது போதாது.கால்களின் இரத்த ஓட்டம் மிகவும் குறைந்துவிட்டதால், அதனையும் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது," என மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த செய்தி உதயாவுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்படுத்தியதுடன் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். உதயாவின் இந்த நிலைக்கு அவரது உடம்பில் சக்கரை நோயின் தீவிரத் தன்மை அதிகரித்தமையே காரணமாகும்.
Listen News!