பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவருடைய 15 வருட நண்பருமான ஆண்டனி தட்டிலுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக கழுத்தில் மஞ்சள் கயிறு காயும் முன்பே விதவிதமான உடைகளில் வலம் வந்தார்.
இந்த நிலையில், பேபி ஜான் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் அதில் ஹீரோவாக நடித்த வருண் தவானுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கீர்த்தியின் மாமியார் இதனை கண்டித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
d_i_a
அதாவது பிரபல நடிகையாக காணப்படும் கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தார். இதை தொடர்ந்து தற்போது பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
பேபி ஜான் திரைப்படம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக கிளாமர் உடையில் வருண் தவானுடன் விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்திருந்தார்.
இதன் போது திருமணம் ஆன ஓரிரு நாட்களிலேயே வருண் தவானுடன் மிகவும் நெருக்கமாக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விடயம் கீர்த்தியின் மாமியாருக்கு பிடிக்காமல் போக, அவர் இனிமேல் படங்களில் நடிக்காமல் படங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனாலும் திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா? இல்லையா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இது தொடர்பில் கீர்த்தி தனது சார்பில் விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு தீர்வு உண்டு.
Listen News!