• Dec 27 2024

கொட்டுக்காளிக்கு வசூல் கொட்டிச்சா? இல்லையா? பாக்ஸ் ஆபிஸ் வட்டார நிலவரம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

கூழாங்கல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீசான படம் தான் கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென்  நடித்துள்ளார்கள். இதனை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

கொட்டுக்காளி திரைப்படத்தில் பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இதற்கு எந்த ஒரு இசையும் அமைக்கப்படவில்லை என்றும் இதற்கு  இசையமைப்பாளர்களே இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த படம் உலகத்தில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்டு விருதும் பெற்றது. இது சூரி கதாநாயகனாக நடித்த மூன்றாவது படம்.

இந்த படத்தை பலரும் பாராட்டியுள்ள நிலையில், உலக நாயகன் கமலஹாசனும் 'நிஜமாகவே சினிமா ஒரு தனி மொழி. அது உங்களுக்கு வருது. அதனால நீங்க எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது. படம் ரொம்ப நல்லா இருக்கு. சில முடிவுகள் எப்படி எடுத்தீங்கன்னு தெரியல. மியூசிக் போடாமல் இருந்தது எல்லாம் சரியான முடிவு' என பாராட்டி இருந்தார்.


இது பேய் கதைத்தான். ஆனாலும் காதல் பேய் கதை. கதாநாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகின்றது. மேலும் இதில் ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீரும் காளை, பூசாரி, பாண்டியன் என பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம் மிகவும் வித்தியாசமாக காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் மூன்று நாட்களை கடந்த நிலையில் முதல் இரண்டு நாட்களுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி முதலாவது நாளில் 42 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் 33 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement