• Dec 25 2024

இவங்க தான் உண்மையான ஜோடியா? எதிர்நீச்சல் ஆதிரையின் போட்டோஸ் வைரல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஒளிபரப்பான காலகட்டத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெறுவதற்கு தவறவே இல்லை. இதில் நடித்த மாரிமுத்துவின் கேரக்டர் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பக்கபலமாக காணப்பட்டது. ஆனாலும் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

எதிர்நீச்சல் சீரியலில் நன்றாக படித்திருக்கும் பெண்களை திருமணம் செய்து வீட்டில் மிகவும் அடிமையாக நடத்தி  வரும் கணவர்களை மீறி எப்படி தமக்கு பிடித்தவற்றை செய்து தைரியமாக வாழ கற்றுக் கொண்டார்கள் என்பதை ஏனைய பெண்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்த கதை அமைந்திருந்தது.

இந்த சீரியலை பார்த்த பல பெண்கள் தங்களது வாழ்க்கையில் நிஜமாக மாறியதால், இந்த சீரியலை நிறுத்த வேண்டும் என்பதற்காக இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இதனால் எதிர்நீச்சல் சீரியலில்  இறுதிக்கட்டத்தில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இறுதியில் நிறைவுக்கு வந்தது.

d_i_a

இதை தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் மதுமிதா கேரக்டரில் நடித்தவர் மட்டும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்தவரின் நிஜ கணவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்த நடிகையின் பெயர் சத்யா தேவராஜ். தற்போது இவருடைய உண்மையான கணவரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. 

இதை பார்த்த சிலர் ஆதிரைக்கு கல்யாணம் முடிந்து விட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருவதோடு அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement