• Jan 19 2025

கேம் சேஞ்சர் படத்தை முடக்க நடைபெற்ற சதித்திட்டம்? அம்பலமாக்கிய பிரபலம்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கரின் நேரடி திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் நடித்திருந்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

கிட்டத்தட்ட நான்கு வருட தாமதத்திற்கு பிறகு கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆனது. இதனால் சுமார் 6600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாளில் இந்த படத்தின் வசூல் 2023 கோடியாக அமைந்தது.

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரனுடன் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் சுமார் 400 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு மட்டுமே 75 கோடி செல விடப்பட்டதாம்.


இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை தோல்வி படமாக்குவதற்காக அல்லு அர்ஜுனின் ரசிகர்களும், எம்டிஆரின் ரசிகர்களும் கோடிக்கணக்கில் செலவழித்து வருவதாக வலைப்பேச்சு அந்தணன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கு சினிமாவில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இருந்த போதும் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ராம்சரனின் படம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக சதி நடப்பதாகவும் அதனை அல்லு அர்ஜுனனின் ரசிகர்களும் எம் டி ஆர் ரசிகர்களும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement