• Dec 26 2024

’குக் வித் கோமாளி’ நடிகை கர்ப்பம்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மற்றும் பல சீரியல்களில் நடித்த நடிகை ரித்திகா தமிழ் செல்வி கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ராஜா ராணிஎன்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்விகா தமிழ்ச்செல்வி. இதனை அடுத்துசிவா மனசுல சக்தி’ ’சாக்லேட்’ ’பாக்கியலட்சுமிஉள்ளிட்ட சீரியல் நடித்த நிலையில்குக் வித் கோமாளிநிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக இவர் கலந்து கொண்டாலும் இவர் அந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்பதும், குறிப்பாக இவர் கோமாளி பாலாவுடன் செய்த ரொமான்ஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்ட ரித்திகா தற்போது அவர் கர்ப்பம் ஆகி உள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு எத்தனை சின்னத்திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமின்றி ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா கலக்கல் ராணி, ராஜூ வூட்ல பார்ட்டிபோன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்த ரித்திகா தமிழ்ச்செல்வி திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement