• Dec 27 2024

குக் வித் கோமாளியில் ஷாலின் ஜோயா எலிமினேஷன் இல்லை.. அப்படி என்றால் வெளியேறியது யார்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்று நேற்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று எலிமினேஷன் ஆனது யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வாரம் எலிமினேஷன் ஆவது ஷாலின் ஜோயா என்று கூறப்பட்ட நிலையில் அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவையும் செய்திருந்தார். இதனை அடுத்து ஷாலின் ஜோயா தான் இந்த வாரம் எலிமினேஷன் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீகாந்த் தேவா எலிவேஷன் செய்யப்பட்டது கோமாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பதும் அவர் ஜாலியாக கோமாளிகளிடம் மற்றும் நடுவர்களிடம் பழகி வந்த நிலையில் அவ்வப்போது பாடலும் பாடி செட்டையே மகிழ்ச்சியாக ஆக்கி வந்தார். இந்த நிலையில் அவர் இந்த வாரம் எலிமினேஷன் ஆகி இருப்பது குறித்து செஃப் தாமு கூறுகையில், ‘நீங்கள் இங்கே இல்லாவிட்டாலும், உங்களுடைய இசை இங்கு இருந்து கொண்டே இருக்கும் என்றும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்து உங்கள் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் சேர்ந்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவை வழி அனுப்பி வைத்த காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

மிக மோசமாக சமையல் செய்யும் ஷாலின் ஜோயா இந்த நிகழ்ச்சியில் இருக்கும் நிலையில் சுமாராக சமையல் செய்த ஸ்ரீகாந்த் தேவா இந்த வாரம் எலிமினேஷன் ஆகி இருப்பது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement