• Dec 26 2024

ஆவலுடன் எதிர்பார்த்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 தொடங்கும் தேதி இதுதான்: அட்டகாசமான அறிவிப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் மிக விரைவில் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து ப்ரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதை பார்த்தோம்.

மேலும் இந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் இணைந்ததை அடுத்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. 



இந்த நிலையில் சற்றுமுன் ‘குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி, ஏப்ரல் 27 முதல் தொடங்கும் என்றும் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ப்ரமோ வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக புகழ் ,குரேஷி, சுனிதா, ராமர் உள்பட சிலர் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 



இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி,  விடிவி கணேஷ்  உள்பட சிலர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டாலும் ஏப்ரல் 27ஆம் தேதி கிராண்ட் ஓபனிங் தினத்தில்தான் யார் யார் போட்டியாளர்கள் என்பது உறுதியாக தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement