• Dec 26 2024

’இந்தியன் 2’ படத்திற்கு திடீர் சிக்கல்.. நீதிமன்ற உத்தரவால் படக்குழு அதிர்ச்சி.. திட்டமிட்டபடி ரிலீசாகுமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜேந்திரன் என்ற வர்மக்கலை கலைஞர், ’இந்தியன்’ முதல் பாக படத்திற்கு கமல்ஹாசன் கேரக்டருக்காக சில வர்ம கலையை சொல்லிக் கொடுத்ததாகவும் அவர் சொல்லிக் கொடுத்த பல காட்சிகள் ’இந்தியன்’ படத்தில் இடம்பெற்றதாகவும் அதற்காக அவருடைய பெயர் ’இந்தியன்’ படத்தின் டைட்டிலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் ராஜேந்திரன் அவர்கள் சொல்லிக் கொடுத்த வர்மக்கலை பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அதற்காக தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ’இந்தியன் 2’ படக்குழு சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதை அடுத்து கமல்ஹாசன் மற்றும் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என்றால் அவர்களது தரப்பு வாதத்தை கேட்காமலேயே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் இரண்டு நாளில் ’இந்தியன் 2’ படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த உத்தரவு படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement