• Dec 26 2024

மறுபடியும் தப்பித்த மனோஜ்.. ‘சிறகடிக்க ஆசை’ இயக்குனரை வறுத்தெடு்க்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் 400 எபிசோடுகளை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளது என்பது தெரிந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அதிருப்திக்கு உள்ளாகும் வகையில் காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த சீரியலில் நல்லதை நினைத்து, நல்லதையே செய்யும், முத்து, மீனா ஆகிய இருவருக்கும் தொடர்ந்து சோதனை ஏற்பட்டு வருகிறது என்பதும், கெட்டதையே நினைத்து பிராடுத்தனம் செய்து வரும் மனோஜ் மற்றும் ரோகிணி ஆகிய இருவரும் தப்பித்துக் கொண்டே இருப்பதும் பார்வையாளர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் மனோஜ் மற்றும் விஜயா ஆகிய இருவரும் சேர்ந்து மீனாவின் நகைகளை கவரிங் நகையாக மாற்றிய நிலையில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் தப்பித்து விட்டதாக வரும் காட்சிகள் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

மனோஜை ஸ்ருதி சிக்க வைக்கும் வகையில் நகைக்கடையில் இருந்து பேசுகிறோம் என்று கூறியதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மனோஜ் ’அப்படி எல்லாம் நான் எந்த நகையும் வாங்கவில்லை என்று கூறி தப்பித்து விடுகிறார். இதை அவர் அம்மா விஜயாவிடம் சொல்லும் நிலையில் இந்த முறையும் மனோஜ் பிரச்சனையில் இருந்து தப்பித்துவிட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது.

மொத்தத்தில் மீனா மற்றும் முத்து மட்டுமே தொடர்ச்சியாக இந்த சீரியலில் பிரச்சனைகளை சந்தித்து வருவதால் இந்த சீரியலின் இயக்குனருக்கு பார்வையாளர்கள் கண்டனங்களை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement