• Oct 26 2024

'தங்கலான்’ டிரைலர் அட்டகாசம்.. ஆனால் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவான 'தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள  இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரை இல்லாத அளவில் விக்ரமின் அட்டகாசமான கெட்டப் மற்றும் ஆவேசமான நடிப்பு இந்த படத்தில் உள்ளது என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இதுவரை கிளாமர் நாயகியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த மாளவிகா மோகனன் வித்தியாசமான சூனியக்காரி கேரக்டரில் நடித்துள்ளார்.

உலக தரத்திலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள், ஆங்கிலேயர் காலத்திலான காட்சிகளை கண்முன் நிறுத்திய பா ரஞ்சித் ஒவ்வொரு காட்சியையும் இந்த படத்தை செதுக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும். மொத்தத்தில் தமிழில் ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தை ரஞ்சித் விக்ரம் உட்பட படக்குழுவினர் எடுத்துள்ளனர் என்பதும், நிச்சயம் இந்த படம் பல தேசிய விருதுகளை வெல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த ட்ரெய்லரில் ரிலீஸ் தேதி குறித்த இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை இன்னும் பட குழுவினர் வெளியிடவில்லை என்பது தான் ஒரு பெரிய ஏமாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.


Advertisement