• Dec 25 2024

டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்திய பிரபல இயக்குனர்கள் , குமுறி அழுகும் குடும்பத்தினர்.

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகிய "சித்தி" சிரியலில் டானியல் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் டானியல் பாலாஜி. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தளபதி விஜயுடன் பைரவா , பிகில் போன்ற திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக இவர் உயிர் இழந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் உடலுறுப்பு தானம் செய்வதில் ஒப்பந்தம் போட்டிருந்ததால் இறந்த பின்பும் அவரது கண்களை தானமாக வழங்கி உள்ளார். 

இவ்வாறு இருக்கையில் இவரது இறுதி சடங்கானது  கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது. இந்த நிலையிலேயே பல சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். 

"வட சென்னை" திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த பல துணை நடிகர்கள் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ,இயக்குனர் அமீர் சுல்தான் ,இயக்குனர் கௌதம் வாசு மேனன் என பலரும் வருகை தந்துள்ளனர். மற்றும் இவரது ரசிகர்களும் பலர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.

டானியல் பாலாஜியின் உடல் இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement