• Dec 27 2024

இரண்டாவது திருமணமா? 30 பேரை இண்டர்வியூவுக்கு அழைத்து ஒருவரை தேர்வு செய்த தனுஷ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஏற்கனவே உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தனுஷும் இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும் அவருடைய பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இரண்டாவது திருமணத்திற்கு தனுஷ் சம்மதிக்கவில்லை என்றும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான ’ராயன்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடலுக்கான பாடல் ஆசிரியரை தேடுவதற்கு தனுஷ் ஒரு பெரிய இன்டர்வியூ வைத்ததாகவும் கிட்டத்தட்ட 30 பேரை இன்டர்வியூ செய்து அதன் பிறகு தான் கானா காதர் என்ற அந்த பாடல் ஆசிரியரை தேடி கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் குவிந்துள்ளனர் என்பதும் தனுஷ் எதிர்பார்த்த மாதிரியே இந்த பாடல் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement