• Dec 26 2024

நேற்றைய போட்டியில் பும்ரா செய்த மேஜிக்.. தனுஷ் போட்ட ஒற்றை வரி ட்வீட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரொம்பவே சுமாராக விளையாடி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் மட்டும் ஓரளவு சுதாரித்து விளையாடி 42 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 120 ரன்கள் என்ற எளிய இலக்கு என்பதால் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதில் வென்று விடும் என்றுதான் கிரிக்கெட் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தானுக்கு 85% வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவுக்கு 15% வெற்றி வாய்ப்புதான் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் பும்ரா திடீரென மேஜிக் செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகிய இருவரையும் சொற்ப ரன்களில் அவுட் ஆக்கினார். அதன்பிறகு அதிரடி ஆட்டக்காரரான இப்தார் அகமது என்பரையும் அவுட் ஆக்கினார். இந்த மூன்று விக்கெட்டுகள் தான் பாகிஸ்தான் அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 20 அவர்களின் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் அடித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பும்ரா யூ பியூட்டி’ என்று ஒரே ஒரு வரியில் தனது வாழ்த்துக்களை பும்ராவுக்கு பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement