• Dec 26 2024

செந்தில் - மீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட தங்கமயில்.. சென்னை செல்வார்களா? கோமதி கூறிய ஆறுதல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்று கடையில் வசூலான பணத்தை அரசியிடம் கொடுத்து எண்ணும்படி சொல்கிறார் பாண்டியன். அப்போது தங்கமயில் நானும் கடையின் கணக்கு வழக்குகளுக்கு உதவி செய்யவா? என்று கேட்ட போது ’வேண்டாம் அரசி தான் இதற்கு சரியானவர்’ என்று பாண்டியன் சொல்லிவிடுகிறார்.

இந்த நிலையில் தான் சென்னை செல்லும் விஷயத்தை சொல் என்று ஜாடை மாடையாக செந்திலுக்கு மீனா கூறும் நிலையில் செந்தில் அமைதியாக இருக்கிறார். இதையடுத்து வேறு வழியில்லாமல் மீனா ’அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு ட்ரெய்னிங்கிற்காக அனுப்புகிறார்கள் என்றும் அதற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

அதற்கு பாண்டியன் அதிருப்தி தெரிவிக்கிறார். ’எதற்காக உன்னை அனுப்புகிறார்கள்? வேற ஆளே இல்லையா? என்று கேட்டபோது ’ட்ரெய்னிங்கிற்கு கட்டாயம் சென்று ஆக வேண்டும்’ என்று மீனா கூறுகிறார். அதற்கு ‘உன்னை எப்படி தனியாக அனுப்புவது என்று? பாண்டியன் கேட்க, போது செந்தில் ’நான் வேண்டும் ஆனால் கூட செல்கிறேன்’ என்று கூறுகிறார். அதெல்லாம் முடியாது ‘கடையில் நிறைய வேலை இருக்கு’ என்று பாண்டியன் முட்டுக்கட்டை போடும் நிலையில்  தங்கமயில் ’ட்ரெய்னிங்கிற்கு போக முடியாது என்று சொல்ல முடியாதா? வீட்டில் விட மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்ல முடியாதா? என்று கேட்க, ’வீட்டில் விடமாட்டார்கள் என்று சொன்னால் வீட்டிலேயே இருந்துக்கொள் என்று சொல்லிவிடுவார்கள்’ என்று மீனா கோபத்துடன் சொல்கிறார்.



இதனை அடுத்து மீனாவுடன் யார் செல்வது என்ற ஆலோசனை நடந்து கொண்டு இருக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவராக சொல்கின்றனர். அப்போது திடீரென தங்கமயில் மீண்டும் ’நானும் அவரும் சென்று வருகிறோம் என்று சொல்ல, பாண்டியன் உடனே ’இது நல்ல யோசனையாக இருக்கிறது’ என்று சொல்கிறார். ஆனால் சரவணன் ’அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார்’. ராஜியும் ’தங்குவதற்கு ஒரு அறை தான் கொடுப்பார்கள், எப்படி மூன்று பேர் தங்க முடியும்’ என்று சொல்கிறார்.

இதனை அடுத்து ’சரி இந்த பிரச்சனையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டு பாண்டியன் சென்று விடுகிறார். பாண்டியன் சென்றவுடன் கோமதி மற்றும் ராஜியிடம் மீனா புலம்புகிறார். ’எதற்காக தங்கமயில் தேவை இல்லாமல் என் விஷயத்தில் தலையிடுகிறார்’ என்ற அப்போது கோமதி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அதே போல் செந்தில் இடமும் வந்து ’தங்கமயில் செய்வதெல்லாம் சரியில்லை என்று கோபப்படுகிறார். செந்திலும் அவரை சமாதானப்படுத்துகிறார்.

இந்த நிலையில் கதிர் மற்றும் ராஜி இடையே சிலர் ரொமான்ஸ் காட்சிகளும் சில ஊடல் காட்சிகளும் நடக்கின்றன. அதன் பிறகு பாண்டியன் மற்றும் கோமதி பேசிக் கொண்டிருக்கும் போது தனது அம்மா கனவில் வந்து தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக சந்தோஷமாக கூறுகிறார். அப்போது கோமதி ’செந்தில் - மீனா சென்னை செல்வது பற்றி என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்கும் போது இறுக்கமான முகத்தோடு கோமதியை பாண்டியன் பார்ப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement