• Dec 25 2024

அடுத்தடுத்து அப்டேட் தரும் தனுஷின் "ராயன்" படக்குழு ! இன்னைக்கு என்னப்பா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் இயக்குனர் தனுஷாக மாறிய பரிணாமம் "பவர் பாண்டி" திரைப்படத்தின் ஊடக அனைவரையும் பெரும் வியப்புக்குள்ளாகி இயக்குனர் தனுஷிற்கு பெரும் வரவேற்பை தமிழ் திரையுலகில் கொடுத்தது.ஆனாலும் அடுத்த படத்தினை இயக்க காலம் தாழ்த்திய தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்குகிறார் எனும் அறிவிப்பு வெளியான போது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது. 

Dhanush's Raayan to release in theatres ...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் "ராயன்" திரைப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா , பிரகாஷ் ராஜ் , செல்வராகவன் , சுந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் ,அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் என நீளும் நடிகர் வரிசை படத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமையுமென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Image

வருகிற 26 ஆம் திகதி உலகளவில் வெளியாகவிருக்கும் "ராயன்" திரைப்படத்தின் படக்குழு நாளுக்கு நாள் படத்தின் முக்கிய அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களிடத்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.அந்தவகையில் இன்று மாலை 6 மணியளவில்  படத்தின் 'ஓஹ் ராஜா..' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாவதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement