• Dec 25 2024

ரீ ரிலீஸ் கலாச்சாரத்தில் பங்கெடுத்திருக்கும் நடிகர் சூர்யாவின் படம்.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் புதிதாய் அறிமுகமாகியிருக்கும் கலாச்சாரம் தான் ரீ ரீலிஸ் கலாச்சாரம்.குறித்த படங்கள் வெளியான காலத்திலே பார்வையாளர்களால் பெரிதாக கண்டுகொள்ளபடாமல் போக காலம் கடந்த பின் படத்தின் அருமை தெரிந்த போது அப் படங்களுக்கு பெரும் துணையாய் மாறின இந்த ரீ ரிலீஸ் கலாச்சாரம்.


தொடரும் இந்த கலாச்சாரத்தில் முன்னணி நடிகர்களின் முந்தைய சூப்பர்ஹிட் படங்களின் ரீ ரீலிஸ் தற்போதைய இளம் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாய் மாறின.இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் தளபதி விஜயின் "கில்லி" படம் அமைந்திருந்தது.

Surya in Vel, surya, vel, movie, tamil ...

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாய் அமைந்திருக்கிறது.2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான இரட்டை வேட நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படமான "வேல்" சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ரீ ரீலீஸ் ஆகிறது.வரும் 23 ஆம் திகதி சூர்யாவின் 49 வது பிறந்ததினமாகும்.   


Advertisement

Advertisement