• Dec 26 2024

தனுஷின் இமேஜை டேமேஜ் செய்ய எத்தனித்த நயன்தாரா.? விக்னேஷ் சிவனும் மிரட்டியதாக பரபரப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான கங்குவா படம் பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் படு வைரலான நிலையில், இன்னொரு பக்கம் நயன்தாரா  தனுஷ் பற்றி வெளியிட்ட அறிக்கை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கங்குவா படத்தை மறந்து நயன்தாரா தனுஷ் பற்றிய விடயங்களை இணையத்தில் தெறிக்கவிட்டுள்ளனர்.

அதாவது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமண டாக்குமெண்ட் வீடியோ தாமதமானதற்கு காரணம் தனுஷ்தான் என்றும் அவர் மூன்று நிமிட வீடியோக்கு 10 கோடி ரூபாய் கேட்கின்றார். இது எல்லாம் தன் மீது உள்ள தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாகத்தான் இவ்வாறு செய்தார் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அவருக்கு தனுஷ் படத்தில் நடித்த நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், தனுஷ் - நயன்தாரா விவகாரம் தொடர்பில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி வழங்கிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் தனுஷ் மீது தவறில்லை என்று தான் தோணுகின்றது. 

d_i_a

ஏனெனில் தடை இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் அவருடன் முறைப்படி அணுகி இருக்க வேண்டும். ஆனால் விக்னேஷ் தனுஷின் மேனேஜருக்கு போன் செய்து அவருக்குத் தெரியாமல் சான்றிதழை கேட்டுள்ளார். அவர் மறுத்துவிட்டார். ஏற்கனவே நாலு கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட நானும் ரவுடிதான் படம் சுமார் 17 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதால் விக்னேஷ் சிவன் உடன் தனுஷ் பேசாமல் இருந்துள்ளார்.


தனக்கு தெரியாமல் சான்றிதழை வாங்க முயற்சித்த விடயம் தனுஷின் காதுக்கு சென்றுள்ளது. இது அவரை கோபப்படுத்தியது. இதனால் தர முடியாது என்று மறந்துவிட்டார். அதன் பின்பு உயர் அதிகாரிகள் விக்னேஷ் சிவன் சார்பாக தனுஷிடம் கேட்டுள்ளனர். எனினும் அதற்கும் அவர் மறுத்துள்ளார்.

இதை தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து எங்களுக்கு அந்த சான்றிதழை தராவிட்டால் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்களுடைய இமேஜை டேமேஜ் செய்வோம் என்று மிரட்டி உள்ளார்களாம். இது தனுஷை மேலும் கோபப்படுத்தியதால் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று அவர்களிடமே சொல்லிவிட்டார் தனுஷ் என்று பிஸ்மி தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement