• Dec 26 2024

பியூட்டி பார்லரில் அம்மாவை மறைத்து வைத்த ரோகிணி.. விஜயா கொடுத்த ஷாக்! விறுவிறுப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில்,மீனாவிடம் உன் புருஷன் கிட்ட சொல்லி வை அங்க வந்து வாய மூடிட்டு இருக்கணும், எந்த பிரச்சினையும் பண்ண கூடாது, போனமா வந்தமா என இருக்கணும் என முத்துவுக்கு சொல்லி வைக்குமாறு சொல்லுகிறார். மீனாவும் முத்துவிடம் நம்மளால எந்த பிரச்சனையும் வேணாம். எனக்காக எதுவும் நடந்தா பொறுத்துக் கொள்ளுங்க என்று சொல்ல, முதலில் கோவப்பட்ட முத்து பிறகு சரி, ஆனால் அப்பாவுக்கு எதுவும்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என சொல்லுகிறார்.

இதைத்தொடர்ந்து மீனா தனது அம்மாவை பார்க்க சென்றபோது அங்கு சத்யாவும் இருக்கிறார். மாப்பிள்ளை வரலையா எனக் கேட்க, அவர் எதுக்கு வரனும் என சத்யா கேட்கிறார். 

மேலும், மீனா தாலி பிரித்துக் கோர்க்கும் பங்க்ஷன் பற்றி சொல்லி அண்ணாமலை உங்களையெல்லாம் கூப்பிடத்தான் இருந்தாரு நான் தான் வேண்டாம் என சொன்னேன். ஏன்னா அங்கே ஏதும் நடந்தா பிறகு நம்ம மேல தான் பழிய போடுவாங்க என சொல்லுகிறார். அதற்கு சத்யா, இங்க பணம் தான் எல்லாம். பணம் இல்லாட்டி மதிக்க மாட்டாங்க. நானும் ஒரு நாள் நிறைய பணம் சம்பாதித்து காட்டுவேன் என சொல்லுகிறார்.


இது தொடர்ந்து ரோகிணி தனது நண்பியிடம் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனுக்கு காசு வேணும். விஜயாவின் உண்மையான முகத்தை பார்த்துட்டேன் அவங்க அப்பாவ வர சொல்லி இருக்காங்க, நான் அதுக்கு ஒரு பிளான் போட்டுருக்கேன், முத்துவ  வச்சு தான் கேம் ஆடனும், அவன தான் தூண்டி விடனும் என பேசிக்கொள்கிறார். மேலும் தனது அம்மாவிடம் போன் பண்ணி தனக்கு வேணும் என சொல்ல, அவரும் நகை இருக்கு அதை விற்றுக் கொண்டு வருகிறேன் என சொல்லுகிறார்.

அதன்படி அவரும் பணத்துடன் வர, முதலில் நீ ஏன் இங்கு வந்திருக்கிற, இருக்கிற பிரச்சினை பத்தாதா என பேசுகிறார். ஆனாலும் அவர் பணத்தை கொடுத்ததும் இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்க, உனக்கு முதல் வாழ்க்கை தான் சரியா அமையல, அந்த தாலிய நான் வைத்திருந்தேன். அதை வைத்து தான் காசு கொண்டு வந்தேன் என பேசிக்கொண்டு இருக்க, அங்கு விஜயா வருகிறார்.

விஜயாவை வெளியிலேயே நிற்பாட்டச் சொல்லிவிட்டு, தனது அம்மாவுக்கு முகத்தில் மாஸ்க் போட்டு விடுகிறார். வெளியில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்த விஜயா, விறுவிறு என மறுவாசல் வழியாக உள்ளே செல்கிறார். ஆனாலும் அவரது அம்மா பேஸ் மாஸ்க் போட்டு இருந்ததால் அடையாளம் காணவில்லை.

மேலும் ரோகிணி இப்பதான் அப்பா போட்ட காசை எடுத்துட்டு வந்தேன். அப்பா டிக்கெட் போட்டுட்டார் விடிய வருவார் என சொல்லுகிறார்.

அதற்கு விஜயா உங்க அப்பா உன் மேல பாசமா தான் இருக்கார், நீ தான் அவரை புரிந்து கொள்ளவில்லை. என்ன பண்றது உனக்கு அம்மா இருந்த அம்மா வந்திருப்பாங்க.  அவங்க தான் அல்பாய்ஸ்ல போய்ட்டாங்களே என்ன சொல்ல, அதை ரோகினியின் அம்மா கேட்கிறார்.இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement