தமிழ் சினிமாவில் தெறி,ராஜாராணி,மெர்சல்,பிகில் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.அதாவது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி பெரும் வெற்றியை பெற்ற அவர் தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஹிந்தி சினிமாவில் பேபி ஜான் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் செய்யப்பட்ட இப் படம் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் அன்று வெளியானது.ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இருக்காமையினால் வசூலில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இத் தோல்வி அட்லிக்கு 100 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது பேட்டியில் "பேபி ஜான் படத்திற்கு என்னை பரிந்துரைத்தது சமந்தா தான். தமிழில் சமந்தா நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் தெறி. அந்த படத்தில் அவர் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் உண்மையில் பயமாக இருந்தது.என்னால் குறித்த கதாபாத்திரத்தை நடிக்க முடியும் என நம்பியதற்கு நன்றி " என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!