• Apr 27 2026

படத்தில் மட்டுமல்ல நேரிலும் நான் இப்படித்தான் என நிரூபித்த இயக்குனர் பா ரஞ்சித்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாகவே ஒரு சில நடிகர்கள் , இயக்குனர்கள்  தங்களது திரைப்படங்களில் சாதிக்கொடுமைகள் , எளியவர்களை ஒடுக்குதல் , பழங்குடியினரை பாதுகாத்தல் என பல கருத்துக்களை கூறுவர் . அவ்வாறு இருக்கும் இயக்குனர் பா ரஞ்சித் செய்த செயல் வைரலாகி வருகின்றது.


சார்பேட்டா , காளா , மெட்ராஸ் போன்ற அருமையான திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் பா ரஞ்சித் ஆவார். இவர் சமீபத்தில் சியான் விக்ரமை வைத்து தங்களான் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.


இந்த நிலையிலேயே 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து இயக்குனர் பா ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement