• Dec 26 2024

முத்து நிரபராதி என நிரூபித்த மீனா..சிறகடிக்க ஆசையில் அடுத்து நிகழ்ப்போவது இது தான்..!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில், முத்து விஷயத்தில் நடந்த உண்மையை அறிந்து கொள்வதற்காக டாஸ்மாக் கடைக்கு செல்கிறார் மீனா. அங்கு வந்த ஒருவர் தண்ணீர் பிடிப்பதற்காக பெண்கள் எல்லாரும் லைனில் நிற்பார்கள். ஆனா இங்க ஒரு பெண்மணி சரக்கு அடிப்பதற்காக க்யூவில் நிற்கிறார் என மீனாவை வீடியோ எடுக்கிறார்.

குறித்த இளைஞன் வீடியோ எடுத்தவாறே மீனாவிடம் சென்று, எத்தனை நாளா உங்களுக்கு இந்த பழக்கம் இருக்கு என கேட்க, கோவத்தில் அவருக்கு கன்னத்தில் அறைகிறார் மீனா. 


மேலும் நான் என் புருஷனுக்காக இங்க வந்து இருக்கன். அது தெரியாம வந்து வீடியோ எடுக்குறியா என அவரை விளாசி அனுப்புகிறார்.

இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை ஓனரிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்கிறார். அவர்களும் மீனா கேட்டதற்காக இரண்டு நாளைக்கு முதல் நடந்த சம்பவத்தின் கேமரா காட்சிகளை காட்டுகிறார்கள்.

இதன்போது முத்து குடிக்காமல் இன்னொருவருக்கு ஊத்திக் கொடுப்பதையும், அதனை சிட்டி தான் வீடியோ எடுத்தார் என்பதையும் அறிந்து கொள்கிறார்.

இதனால் முத்துவிடம் மன்னிப்பு கேட்டு அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். இது தான் இனி வரும் எபிசோட்.


Advertisement

Advertisement