• Apr 27 2026

கண்கலங்க வைக்கும் முதல் பாதி.. அதிரவைக்கும் இரண்டாம் பாதி.. சூர்யாவின் 'கருப்பு' அப்டேட்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில், திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே கவனம் பெற்றுள்ளன. மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சூர்யா, இப்படம் குறித்து பேசும்போது, “இந்த படத்தில் நான் ஹீரோ இல்லை, கருப்பசாமிதான் உண்மையான ஹீரோ” என்று கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், படம் பார்த்தவர்கள் முதல் பாதி உணர்ச்சிகரமாகவும், இரண்டாம் பாதியில் மாஸ் தருணங்கள் நிறைந்ததாகவும் இருப்பதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்படம் ஒரு சாதாரண வணிக திரைப்படமாக இல்லாமல், உணர்ச்சி மற்றும் மக்களுடன் தொடர்புடைய அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் இந்த நம்பிக்கையூட்டும் பேச்சு ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திரையரங்குகளில் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement