• Dec 27 2024

மகாபாரதத்தில் ஆரம்பித்து 6000 ஆண்டுகள் நடக்கும் கதை.. கமல் பட இயக்குனர் தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

மகாபாரதம் காலத்தில் ஆரம்பித்து 6 ஆயிரம் ஆண்டுகள் வரை நடக்கும் கதை தான் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த படத்தின் கதை என அந்த படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடித்தநடிகையர் திலகம்என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம்கல்கி 2898 ஏடி’. இந்த படத்தில் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் வில்லனாக கமல்ஹாசனும், மேலும் முக்கிய வேடங்களில் அமிதாப்பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் 9 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் முதல் இரு பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் கதை மகாபாரத காலத்தில் ஆரம்பித்து  கிபி 2898ல் முடியும் கதை என்றும் அதனால் தான் இந்த படத்திற்குகல்கி 2898 ஏடிஎன்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



6000 ஆண்டுகள் இந்த பூமியில் நடக்கும் விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பூமியில் நடக்கும், நடந்த, நடக்கவுள்ள கற்பனையான சில விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து உள்ளோம் என்றும் ஹாலிவுட் பாணியில் இல்லாமல் முழுக்க முழுக்க இந்திய பாணியில் தான் இந்த படத்தை உருவாக்கி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement