• Jan 06 2025

டைவர்ஸ் கதையே வேணாம்..!! ஜெயம் ரவிக்கு இப்படியொரு சுபாவம் இருக்கா?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் ஜெயம் ரவி சமீப காலமாகவே பல வெற்றி தோல்விகளை சந்தித்து வருகின்றார். சினிமாத் துறையில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சர்ச்சைகள் இவரை சோதித்திருந்தன.

இதுவரையில் எந்த ஒரு கிசு கிசு தகவல்களிலும் சிக்காத ஒரு நடிகராக ஜெயம் ரவி காணப்பட்டார். ஆனாலும் சமீபத்தில் திடீரென தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து பண்ணுவதாக அறிவித்தார்.

ஜெயம் ரவி அறிவித்த விவாகரத்து வழக்கு தொடர்பான மனு விசாரணை இறுதியாக நடைபெற்ற போது அவருக்கும்  ஆர்த்திக்கும் இடையில் ஒரு மணி நேர பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனினும் இதற்கான முழுமையான தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

இன்னொரு பக்கம் ஜெயம் ரவி தனது சினிமா கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார். இறுதியாக வெளியான பிரதர் திரைப்படம் பெரிதளவில் கை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.


இந்த நிலையில், ஜெயம் ரவி டைவர்ஸ் கதை ஒன்றில் நடிக்க மறுத்ததாக வலைப்பேச்சு சேனலில் உள்ளவர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி அவர்கள் கூறுகையில், ஜெயம் ரவி பிரபல கம்பெனி ஒன்றுக்கு மூன்று படத்தை பண்ணித் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.


அதில் ஒரு படத்தை இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டன்ட்  அருண் சக்தி முருகன் என்பவர்  இயக்குவதற்கு தயாராக இருந்தார். அந்த  படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நடிக்கவில்லை என்ற முடிவை எடுத்து உள்ளாராம்.

ஜெயம் ரவி கதை கேட்கும் படங்களுக்கு முதலில் ஓகே சொன்னாலும் அந்தக் கதையை இன்னொரு முறை கேட்கும்போது வேண்டாம் என்று மறுத்து விடுவாராம். இது ஏன் என தெரியவில்லை.  

ஆனால் அதே கம்பெனியில் அருண் விஜய் ரெட்டை தல என்ற படத்துல நடிச்சிருக்கார். அந்த படம் ரிலீஸ் ஆகப்போகுது. அதுமட்டும் இல்லாமல் அவர்  அந்த கம்பெனியில் இருந்து இன்னொரு  படம் நடிப்பதற்கும் தயாராகி வருவதாக வலைப்பேச்சு  சேனலில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement