கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள "காதலிக்க நேரமில்லை" படமானது எதிர்வரும் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வெளியிடுவதற்காக படக்குழு தீர்மானித்திருந்தது.இருப்பினும் தற்போது அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது இப் படத்தின் டிஜிடலினை NETFLIX இற்கு விற்பனை செய்துள்ளமையினால் அவர்களே இப் படத்திற்கான வெளியீட்டு திகதியை இவர்கள் தான் தீர்மானிக்கவுள்ளதாகவும் மற்றும் இந்த நிறுவனத்தின் லைன்அப் படி இப் படத்தினை இப்போது வெளியிட முடியாது மார்ச் மாதம் தான் வெளியிட முடியும் என தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி வெளியீடு இல்லை என அறிக்கை வெளியாகியதுமே கிட்டத்தட்ட 9 படங்கள் களத்தில் இறங்க தயாராகியிருந்தமையும் அதில் இப் படமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!