• Dec 26 2024

இன்ஸ்டா லைவில் கண்ணீர்மல்க பேசிய திவ்யா ஸ்ரீதர்.! ஆதரவு கொடுத்த தமிழக மக்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் இணைந்து நடித்த  திவ்யாவும் அர்ணவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனாலும் இவர்களுடைய வாழ்க்கை நீடிக்க வில்லை. திருமணத்திற்கு பிறகு அர்ணவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக திவ்யா புகார் அளித்தார். மேலும் திவ்யாவுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

கேளடி கண்மணி சீரியலில் அர்ணவ் ஹீரோவாகவும் திவ்யா ஹீரோயினாகவும் நடித்தார்கள். இதன்போது இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள். சில வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், இந்து முறைப்படியும் முஸ்லிம் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு திவ்யா கர்ப்பமான அதன் பின்பு தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அதை நீக்குமாறு சண்டை போட்டு திவ்யாவை அடித்து சண்டை போட்டுள்ளாராம் அர்ணவ.

இதைத்தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடித்த நடிகை அன்சிகாவுடன் அர்ணவுக்கு தொடர்பு  இருக்கும் விஷயம் திவ்யாவுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்பு இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்தார்கள் . அதன்பின் அர்ணவும் அன்ஷிதாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


இந்த நிலையில், திவ்யா ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் மனம் நொந்து சில விஷயங்களை பேசி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில், பலர் என்னை அர்ணவின் முன்னாள் மனைவி என்று சொல்கின்றார்கள்.  எமது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. இன்னும் நாங்கள் முறைப்படி பிரியவில்லை. ஒருவேளை அவர் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் உண்மை இதுதான். நான் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளேன்

என் கர்ப்ப காலத்தில் நான் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு சூட்டிங்  போனேன். ரொம்ப வேதனையா இருக்கும். அந்த நேரத்தில் எனது அம்மாவும் இறந்துவிட்டார். எனது அப்பா தான் இரண்டு மகள்களையும் பார்த்துக் கொள்கின்றார். வாழ்க்கையில் பெற்றோரை தவிர வேறு யாரையும் நம்பாதீங்க. 

என் குடும்பம் இப்பதான்  சந்தோசமா இருக்கு. அதற்கு காரணம் நீங்கள் தான். தமிழக மக்களை நான் மறக்கவே மாட்டேன் ஒவ்வொரு முறை சோர்ந்து போகும் போதும் எனக்கு தைரியத்தை கொடுப்பது நீங்கள் தான்.

பல பேர் எனக்கு ஆதரவு கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி உங்களின் ஆதரவு எனக்கு தேவை என ரொம்ப எமோஷனலாக பேசியுள்ளார் தற்பொழுது அவருடைய வீடியோ வைரலாக வருகின்றது..




 

Advertisement

Advertisement