• Dec 25 2024

யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது மனைவி பற்றி தெரியுமா ? யுவன் ஒரு இஸ்லாமிய மதத்தவரா !

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

இளைஞர்களின் இசை நாயகன் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா தான். இசையமைப்பாளரில் யாரை பிடிக்கும் என்றால் ஒட்டு மொத்த பெயரும் சொல்லும் ஒரு பதில் யுவன் ஷங்கர் ராஜா. அவருடைய இசை எங்களுக்கு ஒரு போதை என்றும் ,காதல் தோல்வி அடைந்தால் அவருடைய இசை மருந்து என்றும் பல இளைஞர்கள் வர்ணிப்பதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கும். இவருடைய இசையில் காதல் வலிகளை மறந்தவர்களும் இருக்கிறார்கள், காதலிக்க ஆசை வந்தவர்களும் இருக்கிறார்கள். அப்பிடிப்பட்ட ஒருத்தரான யுவன் ஷங்கர் ராஜாவினுடைய வாழ்க்கையிலையும் இரண்டு காதல் வலிகள் இருந்து மூன்றாவது மனைவி அந்த காதல் வலிகள் எல்லாவற்றையும் மாற்றி விட்டு இருக்கிறார். 


யுவன் ஷங்கர் ராஜாவினுடைய மூன்றாவது மனைவியான ஜஃப்ரூன் நிசார் யாரு அவங்க எப்பிடி யுவன் ஷங்கர் ராஜாவை திருமணம் செய்தார். என்பதை பார்க்கலாம் வாருங்கள், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இவருடைய இசையில் மயங்காதவங்களே இருக்க மாட்டார்கள் . சொல்ல முடியாத அளவுக்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இளைஞர்களில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இரண்டு காதலிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது .  அதே போல் இரண்டு திருமணமும் தோல்வியில தான் முடிவு பெற்று இருக்கிறது. 


மூன்றாவதாக தான்  ஜஃப்ரூன் நிசார் என்கின்ற இஸ்லாமிய மத பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இப்ப வரைக்கும் இவங்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே போய் கொண்டு இருக்கிறது. ஆனாலும் யுவனின் மனைவியான ஜஃப்ரூன் நிசார் பல சர்ச்சையான  விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளார். யுவனை மதம் மாற்றியுள்ளார் என்றும்  பலர் கூறிவந்தனர். 



ஜஃப்ரூன் நிசார் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான். 2015 ல் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை மூன்றாவதாக திருமணம் பண்ணி இருக்கிறார்.அதாவது யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஜஃப்ரூன் நிசார் மூன்றாவது மனைவி .யுவனுக்கும் ஜஃப்ரூன் நிசாருக்கும் ஒரு அழகான பெண் குழந்தையும் உண்டு.ஜஃப்ரூன் நிசார் ஒரு நேர்காணலின் போது சொல்லி இருந்தாங்க , நான் ஒன்றும் யுவன் ஷங்கரை மதம் மாற்றவில்லை அவரை நான் திருமணம் செய்ய முன்பே அவர் இஸ்லாமிய மதத்தில் தான் இருந்தார். யுவனை ஒரு குடும்ப நண்பர் மூலம் தான் எனக்கே தெரியும் . நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் பண்ணவில்லை இது ஒரு அரேன்ஜ் மேரேஜ் தான். என்றும் பதில் கூறியிருக்கிறார் . 


முக்கியமா யுவன் மனைவியான ஜஃப்ரூன் நிசாருக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இவர் ஒரு சிறந்த ஆடையலங்கார வடிவமைப்பாளர். இவருடைய பேஷன் ஆடையலங்கார வடிவமைப்பு தான் .ஜஃப்ரூன் நிசார் யுவன் ஷங்கர் மேல ஒரு புகார் சொல்லி  இருந்தாராம் யுவன் எவ்வளவு காதல் பாடல் எழுதுவார் .ரோமேன்ஸ் பாடல் பாடுவார் . ஆனால் இவருக்கு ரொமென்ஸ் கொஞ்சம் கூட வராது . சாமியார் மாதிரி வீட்டில இருப்பார் என்றும் நகைச்சுவையாக நேர்காணலின் போது சொல்லுவார் . 


இந்த அளவுக்கு தன்னுடைய கணவரோடு நல்ல ஜாலியாக இருக்கிற ஒருவர் . இவர் சென்னையிலேயே கோடி கணக்கில் சம்பாதிக்கிறார் . சென்னையிலேயே ஒரு பெரிய ரெஸ்டாரெண்ட் கட்டி வைத்து நடத்துகிறார் . யார் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தாமல் சந்தோசமாக தனது கணவரான யுவன் ஷங்கர் ராஜாவோட வாழ்ந்து கொண்டு இருக்கிறவர் தான் ஜஃப்ரூன் நிசார் அவர்கள் . 

Advertisement

Advertisement