• Dec 26 2024

அட்ராசக்க,தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் எனப் பலரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பல கெட்ட வார்த்தை வசனங்களும், குறிப்பாக ஒரு இடத்தில், வேலைக்கார நாய்கள் என்று இருந்த வசனத்தை மூட்போட்டு நாய்கள் என்று மட்டும் மாற்றி உள்ளதாகவும் அதே போல், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கட் செய்துள்ளனர். கிட்டத்தட்ட படத்தில் 14 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கத்தரி போட்டு யூஏ சான்றிதழ் கொடுத்தனர்.


இப்படத்தில் தனுஷ் ஈசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அண்ணனாக செங்கோலனாக என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். அண்ணன் தம்பி இருவரும் வேறுவேறு காரணங்களுக்காகப் போராடினாலும், அவர்கள் ஒன்றாக இணையும்போது, திரையில் அவர்களது கெமிஸ்ட்ரி மிரட்டியுள்ளது.


இந்த நிலையில் இப்படத்தின்  முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் ரூ.8.65 வசூலித்து பொங்கல் ரேஸில் முதல் இடத்தில் உள்ளது. இனி வரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் கேப்டன் மில்லர் திரைப்படம் மேலும், வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement