• Dec 26 2024

சிறகடிக்க ஆசை நடிகைகளுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அள்ளிக் கொடுக்கும் விஜய் டிவி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனித்தனி மவுசு உண்டு.

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெறுவதற்காகவே, போட்டிபோட்டு சீரியல்களை இறக்கி வருகின்றன.

அதன்படி, எதிர்நீச்சல், கயல், சிறகடிக்க ஆசை, அண்ணா ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலமானவை. 

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி, சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் முத்து, மீனாவுக்கு ஒரு நாள் மட்டும் 12000 சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.

அதுபோல முத்துவின் அப்பாவாக நடிக்கும் அண்ணாமலைக்கு 8000, மற்றும் அம்மாவாக நடிக்கும் விஜயாவுக்கு 8000 ரூபாயும்  கொடுக்கப்படுகிறதாம்.

மேலும் ரோகிணி, மனோஜ் கேரக்டரில் நடிப்பவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவும்,  ரவி, ஸ்ருதியாக நடிப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபா சம்பளமும் கொடுக்கப்படுகிறதாம்.

அத்துடன் மீனாவின் தம்பி, தங்கையாக நடிப்பவர்களுக்கு 3000 ரூபாவும் கொடுக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement