• Apr 18 2026

ஏகே 63 படத்திற்காக அஜித் கேட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இப்பிடி சென்டிமென்ட் பார்க்கின்றாரே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

துணிவு படத்தை் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார்.

படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63வது படத்தில் நடிக்கவுள்ளார்.இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


இந்தப் படத்தை காமெடி என்டர்டெயினராக எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மார்ச் மாதத்தில் இருந்து அஜித் தனது ஏகே63 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். மார்க் ஆண்டனி படத்தை டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு இயக்கியிருந்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை காமெடி என்டர்டெயினராக எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அஜித் படங்களின் பிசினஸ் என்பது 250 கோடிகளாக இருக்கும் நிலையில் அவருக்கே 163 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படி ஆகாது என்பதால்தான் முன்னதாக இந்தப் படத்திலிருந்து சத்யஜோதி நிறுவனம் பின்வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. 


ஆனாலும் அடுத்ததாக வெளியாகவுள்ள விடாமுயற்சி படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்திற்கு அடுத்தப்படத்திற்கு இத்தகைய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement