• Dec 27 2024

சக்கைபோடு போடும் 'மிஷன் சாப்டர் 1'.. மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதன்படி, அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது.

இப்படத்தில எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


இந்த படம் அதிகபடியான தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும், இந்த படத்திற்கு நல்ல விமர்சனமே மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் மொத்த வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். 

Advertisement

Advertisement