• Dec 26 2024

மைனஸ் டிகிரி குளிரில் புரபோஸ் செய்த காதலன்! 'யெஸ்' கூறி காதலை ஏற்ற எமி ஜாக்சன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன், கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமி ஜாக்சன். அப்படத்தில் வெளிநாட்டுப் பெண்ணாகவே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.  

அதன்பின்னர் தனுஷுக்கு ஜோடியாக தங்கமகன், விஜய்யுடன் தெறி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார். 


திரைப்படங்களில் ஆக்ட்டிவாக இருந்த எமி, ஜார்ஜ் என்பவருடன் காதல் வயப்பட்ட பின்னர் அவருடன் டேட்டிங் செய்து வந்தார். இந்த ஜோடிக்கு திருமணம் ஆகும் முன்பே ஆண் குழந்தையும் பிறந்தது. 

எனினும், திருமணம் நிச்சயம் ஆன நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துவிட்டனர்.


மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற வேறொரு ஹாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்து நெருக்கமாக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். 

இந்த நிலையில், எமி ஜாக்சன் தனது காதலன் propose செய்த அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

இதன் மூலம் அவர் இரண்டாவது முறை நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement