விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகிய பிக்பாஸ் ஷோவினுடைய 8 ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. வழமையாக கமலகாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியினை இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்தார்.
23 போட்டியாளர்கள் கலந்திருந்த இந்த நிகழ்ச்சியில் top 5 போட்டியாளர்களாக ரயான் ,பவித்ரா ,விஷால் ,சவுந்தர்யா ,முத்து குமரன் ஆகியோர் கலந்திருந்தனர். இந்த சீசன் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னராக முத்து தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8 இன் இறுதிப் போட்டி இந்த ஆண்டு தனி சாதனை படைத்துள்ளது இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர் மேலும் 1.6 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் வரை இந்த நிகழ்ச்சி பார்க்கப்பட்டுள்ளது.
மற்றும் இந்த சீசனில் 10.5 டிஆர்பி ரேட்டிங்கைப் பெற்றது. இது கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டுகிறது ஏனெனில் கடந்த சீசன் 9.9 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்தது.இந்த சாதனைகள் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பிரபலத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
Listen News!