பல ரசிகர்களின் கவலை,சோம்பல் ,மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளிற்கு சொந்தக்காரன் ஆகிய இசைஞானி இளையராஜா அவர்கள் தனது இசை பயணத்தினை 1976 தொடங்கி இன்று வரை சிறப்பாக நிகழ்த்தி வருகின்றார். பல தலைமுறை ரசிகர் கூட்டத்தினை தன்வசமாக்கி கொண்ட இவர் தற்போது தனது பாடல் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
இளையராஜா மியூசிக்கினை மனிதர்கள் மாத்திரமின்றி விலங்குகளும் ரசிக்கின்றன என இந்த உலகம் அறியும் படி முந்தைய காலங்களில் தியேட்டர் ஒன்றில் இடம்பெற்ற விடயத்தினை மிகவும் அழகாக கூறியுள்ளார்.இளையராஜா மாத்திரமின்றி அவரது குடும்பமுமே இசை குடும்பமாக தற்போது திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த பேட்டியில் இவர் "என் பாட்டை கேட்க காட்டு யானை கூட்டம் தியேட்டருக்கு வந்திருக்கு.
ஒரு மலை பக்கத்தில் உள்ள ஒரு ஊர்ல உள்ள ஒரு தியேட்டரில் ஒரு படம் தொடர்ந்து ஆறு வாரம் ஓடி இருக்கு. அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டை கேட்குறதுக்காக யானை கூட்டம் ஒன்னு வயல் வரப்புகளையும், வாழை தோட்டத்தையும் எதுவும் செய்யாமல் கூட்டமாக தியேட்டர் வாசலில் வந்து நிற்கும். அப்புறம் பாட்டு முடிந்ததும் எந்த இடையூறும் செய்யாமல திரும்ப காட்டுப்பகுதிக்கு போய்டு. அது என்ன பாட்டுன்னா 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' என்ற பாட்டு தான். இது உலக சரித்திரத்திலேயே நடக்காத நிகழ்வு" என கூறியுள்ளார்.
Listen News!