விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று ஒரு முன்னனி நடிகராக தனக்கென ஒரு படை ரசிகர் கூட்டத்தினை கொண்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்பட வெற்றியின் பின்னர் தமிழ் சினிமாவில் shine ஆகியுள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் தற்போது சுதா கெங்கார இயக்கி வரும் "பராசக்தி " எனும் படத்தில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் தற்போது இவர் திருச்சியில் தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
இதன் போது உரையாற்றிய SK "இங்கு சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம். எனக்கு கணக்கு சரியாக வராது. சுமாராகத்தான் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி இருந்தேன். அப்பா என்னிடம், நான் யார்கிட்டயும் ரிக்வெஸ்ட் பண்ணி எதையும் கேட்டது இல்லை. உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூலில் நின்று கேட்டு சீட்டு வாங்கி இருக்கிறேன். தயவுசெய்து கேட்டு நல்லா படி என்று சொன்னார். நமக்காக அப்பாவை ஒரு மணி நேரம் நிக்க வைத்துவிட்டோமே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். இப்போ அதே ஸ்கூலில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன்." என மிகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.
Listen News!