• Dec 25 2024

தினேஷை கழட்டிவிட்ட மகாலட்சுமி என்ன பண்ணுறாங்க தெரியுமா? பீச்சில் தெறிக்கும் போட்டோஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ரச்சிதா மகாலட்சுமி.  அந்த சீரியலில் கவினுக்கு ஜோடியாக நடித்திருப்பார். முதலாவது சீரியலில் நடிக்கும் போதே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த ஜோடி பற்றி பேசாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.

இதை தொடர்ந்து தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரச்சிதா. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை.

யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதன் பின்பு ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு ரச்சிதாவுக்கு பின்னால் ராபர்ட் மாஸ்டர் லவ் ராக்கெட் விட்டார்.

d_i_a

இதை அடுத்து தனது மனைவிக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் தினேஷும் போட்டியாளராக சென்றிருந்தார். அதன்பின் இருவரும் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தான் கொடுத்தது.


ரச்சிதா தனது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கன்னடத்தில் இவர் நடித்த படம் ஒன்று மிகவும் பிரபலமாக காணப்பட்டது. அதன் பின்பு பிக் பாஸ் பிரபலங்களுடன் பயர் என்ற  படத்திலும்  நடித்துள்ளார்.

இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது. அதில் அவர் கடற்கரையோரம் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

எனினும் சிலர் தினேஷை கழட்டி விட்டு ரச்சிதா ஊர் சுற்றி திரிவதாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். எது எவ்வாறு எனினும் இவற்றை எல்லாம் கவனிக்காமல் ரச்சிதா தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement