இந்திய சினிமாவில் பல காமெடிக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர் தான் வைகைப் புயல் வடிவேல். தற்போது சுந்தர்.C இயக்கத்தில் வடிவேல் "கேங்கர்ஸ்" திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. வின்னர் , நகரம் போன்ற பல ஹிட் படங்களில் இணைந்து நடித்த இவர்கள் நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர் .
இவர்களின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் 14 வருடங்களின் பின் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் "கேங்கர்ஸ்" திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வடிவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கிளாஸ் கட்பண்ணுற வேலை செய்ததாகக் கூறினார். அத்துடன் ஷோக்கேஷ் கண்ணாடி , கார் கண்ணாடி ,பஸ் கண்ணாடி கட் பண்ணுற வேலைக்குத் தான் ஐயா எங்களைக் கூட்டிக் கொண்டு போவார். அவருக்கு உதவியாக நானும் தம்பியும் வேலை செய்வோம்." என்று கூறியிருந்தார். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Listen News!