• Mar 09 2025

ரீரிலீஸ் ஆகவுள்ள ஜெயம்ரவியின் சூப்பர் ஹிட் திரைப்படம்..! எப்போ தெரியுமா..?

Mathumitha / 22 hours ago

Advertisement

Listen News!

மோகன் ராஜா இயக்கத்தில், ரவி மோகன், நதியா, அசின், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான "M. Kumaran S/O Mahalakshmi" திரைப்படம் மார்ச் 15 ஆம் தேதி ரீரிலீஸ் செய்வதற்காக படக்குழு தீர்மானித்துள்ளனர். 2004ஆம் ஆண்டு வெளியான இப் படம் தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.


இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையை சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.மேலும் இப் படத்தினை m .ராஜா தயாரித்துள்ளார். இப் படத்தில் இருக்கும் அம்மா மகன் பாசம் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. 2004 ஆம் ஆண்டு வெளியாகிய இப் படம் அந்த வருடத்தில் 5 கோடி வசூலித்தது.


பெரும் எதிர்பார்ப்புடன் ரீரிலீஸ் செய்யப்படும் இப் படம் தற்போதும் அதிகளவில் வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மார்ச் 15-ம் தேதி ரீரிலீசாகும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement